புதன், 9 ஜனவரி, 2013

சிறிய கட்சிகளுடன், பெரிய கட்சிகள் தேர்தல் கூட்டணி கணக்கு !




பெரிய கட்சிகளால் தான் சிறிய கட்சிகள் இருக்கின்றன; என்று பல அரசியல் விஞ்ஜானிகள் கூறுகிறார்கள்; அந்த கூற்று முற்றிலும் பொய்யானது. சிறிய கட்சிகளின்  வாக்குகள் தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்; இவர்களின் தேர்தல் கூட்டணி என்பதற்கு வரைமுறை எதுவும் இருக்கிறதா? இல்லை கொள்கை இருக்கிறதா? என்றால் ஒரு வெங்காயமும் இல்லை! ஒரு பிரபல எழுத்தாளர் குழந்தைகளுக்கு கூறும் கதைகளை நாவலாக தொகுத்து எழுதி இருக்கிறார். அவர் பெயர் நினைவில்லை, அனேமாக காட்வின் என்றுதான் நினைக்கிறேன். அந்த தொகுப்பில் இருந்த ஒரு சிறுகதை நமது தேர்தல் அரசியல் கூட்டணிக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. அந்த கதை...

ஒரு சுறாமீன், சிறிய மீனிடம் கேட்டதாம் எனக்கு பசிக்கிறது; உனக்கு பசிக்கிறதா? என்று. அதற்க்கு சிறிய மீன் ஆமாம் என்றதாம். மீண்டும் சுறாமீன் சரி அப்படியானால் உன்னால் முடிந்தால் என்னை கொன்று சாப்பிட்டுக் கொள்; என்னால் முடிந்தால் உன்னை கொன்று சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றதாம் ! 

அப்படித்தான் இங்கே தேர்தல் கூட்டணி கணக்குகளும், பெரிய கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் ஏற்படும் அதிகாரப் பசியில், ஒருவித குறைந்தபட்ச உடன்படிக்கை மூலம் ஒருசேர கரம் சேர்க்கிறார்கள்; இறுதியில் சுறாமீன் சின்னமீனை கொன்று சாப்பிடுவதைப் போல, பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை பசிக்கு  சாப்பிட்டுவிட்டு பின்பு அந்த சிறிய கட்சியை ரெண்டாக, மூன்றாக உடைத்து ஏப்பம் விட்டு விடுகின்றன; அதற்க்கு தமிழகத்தில் உதாரணங்கள் பல....

- அங்கனூர் தமிழன் வேலு

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக