2009 க்குப் பிறகு தமிழன் என்றும், ஈழம் ன்றும் கூச்சல் போடும்
சிலரை காணும் போது கடுமையான கோபம் பீறிட்டுக் கொண்டு
வருவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை;
ஒருமுறை பாவலர் இன்குலாப் அவர்கள்...
"மனுசங்கடா....நாங்க மனுசங்கடா
உன்னைப் போல, அவனைப் போல
எட்டுசாணு ஒசரமுள்ள
மனுசங்கடா - டேய் மனுசங்கடா
சதையும் எலும்பும் நீங்க வச்ச
தீயில் வேகுதே உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெய் ஊத்துதே
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க
எரியும்போது எவன் மசுரைப்
புடுங்க போனீங்க? "
என்று கோபமாக பாடினார் .... அதுபோல
தமிழன் டா... நாங்க தமிழன் டா
உன்னைப் போல, அவனைப் போல
வேட்டிகட்டி நல்ல தமிழைப் பேசும்
தமிழன் டா... டேய் தமிழன் டா...
நீங்க ஈழம் என்ற போதும், தமிழன்
என்றபோதும் உங்க பின்னாடி வந்த
தமிழன் டா... ஈழத்தமிழருக்கு
இன்னல் என்ற போது தீ யில் எங்க உசுர
மாய்த்துக் கொண்ட தமிழன் டா...
எங்க குடிசையெல்லாம் தமிழன்
வச்ச தீயில் வேகுதே; ஆண்ட சர்க்காரும்
ஆளும் சர்க்காரும் அதில் எண்ணெய் ஊத்துதே
நாங்க
எரியும் போதும்,
எங்க குடிசை எரியும் போதும்
எவன் மசுரைப்
புடுங்க போனீங்க?
என்று கேட்கத்தான் எத்தனிக்கிறேன்
- அங்கனூர் தமிழன்வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக