சனி, 5 ஜனவரி, 2013

ஒரு உயிரை காக்க, உரிமைப் போராட்டம்

ஒரு உயிரை காக்க, உரிமைப் போராட்டம் என்ற வீரியமான முழக்கத்தோடு இன்று சென்னையில் (05.01.2013) இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாநிலை  அறப்போராட்டம் நடந்தது; இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தோழர் தடா.ஜெ.ரஹீம் அவர்கள் தலைமையில் கோவை சிறையில் 15 ஆண்டுகளாக வாடிவரும் அபுதாஹீரை விடுதலை செய்யக்கோரி நடந்த அறப்போராட்டத்தை  ஒரு உயிரைக் காக்கும் போராட்டமாக மட்டும் நான் கருதவில்லை, ஒரு உண்மையை உரத்து சொல்லும் கூட்டமாகத்தான் கருதினேன். அதாவது இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு அவதூறு பரப்பிவரும் நிலையில் எங்களுக்கு அறவழியிலும் போராட தெரியும் என்பதை தெளிவாக இந்துத்துவ சக்திகளின் செவுட்டில் அறைந்து கூறியிருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருப்பது என்ன பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இசுலாமியர்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம் தான். இசுலாமிய மார்க்கப்படி ஏக இறைவன் அல்லாஹ் வை தவிர வேறு யாருக்காகவும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்பது இசுலாமிய மார்க்க சட்டம். அந்த சட்டத்தையும் மீறி, தனது சமுதாய எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் அறவழியில் போராடுபவர்கள் ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல என்பதை உணர்த்தி இருக்கிறார்கள். தம் சமூக மக்களின் மீது விழுந்துள்ள களங்கத்தை துடைக்க முனைந்திருக்கிறார்கள். மனிதநேயத்திற்காக மார்க்கத்தையும் மீறி வந்திருக்கிறார்கள். இதில் இன்னொரு உண்மையும் தெளிவாக புலப்பட்டது; அதாவது இசுலாமியர்கள் மார்க்க ரீதியாக ஒன்றுபடுவார்கள் ஆனால் அரசியல் ரீதியாக ஒன்றுபடமாட்டார்கள், அந்த உணர்வில் இருந்து இசுலாமியர்களை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சியில் தோழர் தடா.ஜெ.ரஹீம் அவர்கள் முன்வந்திருப்பது வரவேற்ககதக்கது; இது ஒரு தொடக்கம், இன்னமும் இதுபோன்ற நீண்ட நெடிய பயணங்களை தடா.ஜெ.ரஹீம் அவர்களும், இந்திய தேசிய லீக் கட்சியும் முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்...

- அங்கனூர் தமிழன் வேலு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக