சனி, 23 மார்ச், 2013

ரஜினிகாந்தின் மனித நேயம் (?)


மிகப்பெரிய நடிகர் என்றும், சூப்பர் ஸ்டார் என்றும், பணம் வசதி இருந்தும் எளிமையாக வாழ்பவர் என்றும்  திரைப்பட பிரியர்கள் எல்லோராலும்  அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும். சமீபத்தில் ஜப்பானில் வந்த ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து அது நாளிதழ்களில் எல்லாம் வெளிவந்தது. அது அப்படியே இருக்கட்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்துக்கு உடல்நிலை மோசமாகி அது சிறுநீரக அறுவைசிகிச்சை வரை சென்றது. அவர் உயிரோடு திரும்பி வருவாரா என்ற சந்தேக விவாதங்கள் எழுந்தன. அப்போது அவர் நலமுடன் வரவேண்டும் என்று துடித்தது,  அவருக்காக பிரார்த்தனை செய்தது அவரை வைத்து பணம் சம்பாதித்த இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ அல்லது அவரால் பயன்பெற்ற சக நடிகர்களோ அல்ல; அவ்வளவு ஏன் அவரை திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ்ந்துவரும் அவரது மனைவியோ, அல்லது அவரது மகள்களோ, மருமகன்களோ அல்ல. உலகெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்கள் அல்ல. அவர் பிறந்த கன்னட மாநிலத்தில் இருந்துகூட குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் கவலை கொள்ளவில்லை. மாறாக அவர் நலமுடன் திரும்பி வரவேண்டும் மீண்டும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று விரும்பியது, துடித்தது எல்லாமே அவரை வாழவைத்து, வாழவைத்துக் கொண்டிருக்கும் என் அருமை தமிழர்களே. அங்க பிரதட்சணை செய்தார்கள், தேர் இழுத்தார்கள், அக்னி சட்டியை சுமந்தார்கள், தீ மிதித்தார்கள், யாகம் நடத்தினார்கள், மருத்துவமனை முன்பு தவம் கிடந்தார்கள், எல்லா வற்றுக்கும் மேலாக மண்சோறு தின்றார்கள். இவை அனைத்துமே ரஜினிகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக அவரால் எந்த விதத்திலும் பயன் பெறாத என் அருமை தமிழர்கள் செய்த தியாகங்கள். இதை முட்டாள்தனம் என்றுகூட சொல்லலாம். ஒருவர் மீது அளவுகடந்த அன்பை வைக்கும் போது அவருக்காக எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் பெரும்பாலான மனிதர்கள்.

ஒரு திரைப்படத்தில் தமிழர்களை பார்த்து வட இந்திய அதிகாரி ஒருவர் "செண்டிமெண்டல் இடியட்ஸ்" என்று சொல்வார். அதற்கு மற்றொரு நடிகர் திஸ் நாட் "செண்டிமெண்டல் இடியட்ஸ்" இங்க தொண்டர்களை ஏமாற்றிய தலைவர்கள் உண்டு. ஆனால் தலைவரை ஏமாற்றிய ஒரு தொண்டர்களும் கிடையாது. என்று சொல்வார். அது ரஜினிகாந்துக்கு முழுமையாக பொருந்துகிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்கள் முற்றாக நசுக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்கள் சீராக இருந்தால் தான் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களின் வாழ்க்கையே ஓடும் என்ற உண்மையை ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் உணர மறுக்கிறார்கள். சமீபத்தில் விஸ்வரூபம் திரைப்பட சிக்கலில் கமல்ஹாசன் "நான் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன்" என்று ஒற்றை வார்த்தையை தான் சொன்னார். அதற்காக துடித்த ரஜினிகாந்த் "கமல்ஹாசனை எனக்கு 40 ஆண்டுகளாகத் தெரியும். அவர் யாருடைய மனதையும் புண்படுத்தாதவர். அதனால் தான் முஸ்லிம் அமைப்பினர் பலருக்கு திரைப்படத்தை முன்னதாகவே திரையிட்டு காட்டியிருக்கிறார்.ரூ. 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்தால் கமல்ஹாசன் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றவர் கமல்ஹாசன்.இத்திரைப்படம் தொடர்பாக இருதரப்பினரும் அமர்ந்து பேசி நல்லதொரு தீர்வு காண வேண்டும்." என்று கமலஹாசனின் மீதான தன் அன்பையும், தனி மனிதரின் தவிப்பையும் வெளிப்படுத்தினார். நண்பரின் துன்பத்தில் ரஜினிகாந்த் பங்கெடுத்தது மகிழ்ச்சி தான்.

நேற்று (22.03.2013) ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதுவும் எந்த தவறும் இல்லை. சக மனிதன், அதோடு மட்டுமில்லாமல் சகநடிகர் என்ற அக்கரையில் ரஜினிகாந்த் இப்படி வேதனைப் பட்டிருப்பது எந்த விதத்திலும் தவறில்லை. இது முழுக்க, முழுக்க சரியே. ஆனால்...

கமலஹாசனுக்கு துடித்த ரஜினிகாந்தின் இதயம், சஞ்சய் தத் க்கு துடித்த ரஜினிகாந்தின் இதயம் அவரை வாழவைக்கும் தமிழர்களுக்காக துடிக்க மறுப்பதேன்? அப்படியானால் அவரின் துடிப்பு சரியானதா? வியாபார நோக்கமானதா? என்பதை அவர் நாட்டு மக்களுக்கு குறிப்பாக அவரது உயிரில் அக்கறை கொண்டுள்ள அவரது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.

(1) 2009 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலையில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது தெரியாத ஒன்றா?

(2) பால்மணம் மாறாத பச்சிளம் பிஞ்சு பாலச்சந்திரன் புகைப்படம் கண்டு உலகமே அதிர்ந்ததே. ரஜினிகாந்துக்கு தெரியாமல் போனது எப்படி?

(3) ரஜினிகாந்த் மீன் சாப்பிடுவார் என்று நினைக்கிறேன். அவர் சாப்பிடும் மீனுக்கு தன்னுடைய உயிரை பணயம் வைக்கும் தமிழக மீனவர்களின் அன்றாட இன்னல்கள் தெரியாமல் போனது எப்படி?

(4) ரஜினிகாந்த் போன்றவர்கள் குளிர்சாதன அறையில் சொகுசாக வாழ எம்மக்களின் உயிரில்  கூடங்குளம் ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் துரோகம் ரஜினிகாந்துக்கு தெரியாமல் போனது எப்படி?

(5) தருமபுரியிலே எறிந்த 300 சேரிக்குடிசைகள் ரஜினிகாந்தின் கவனத்துக்கு செல்லாமலா இருந்திருக்கும்? அதில் எத்தனை தீவிர ரஜினி ரசிகர்களின் வீடாக இருக்கும் என்பதை உணாரமலா இருந்தார்?

(6) 23 ஆண்டுகளாக வாழ்வா? சாவா? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டே செத்துக் கொண்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்களின் விடுதலை குறித்து என்றைக்குமே தன் வேதனையை வெளிக்காட்டாத ரஜினிகாந்துக்கு உண்மையில் மனித நேயம் இருக்கிறதா?

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தில் தணலாய் கனன்று கொண்டிருக்க ரஜினிகாந்த் எங்கோ ஒரு குளிர்சாதன அறையில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தவர் திடீரென் கண்விழித்து சஞ்சய் தத் தை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் சஞ்சய் தத் தை தூக்கில் இடப் போவதில்லை; மாறாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் தான். எத்தனையோ சேரிகள் சிறைகளை விட கொடுமையாக இருக்கும் வேளையில், அந்த சேரியில் உழலும் தமிழன் தனக்கு கிடைக்கும் சொற்ப ஊதியத்தையும் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமலஹாசன் விஜய், அஜித் போன்றவர்களின் வயிறு நிரப்பி, தன் வயிறை பட்டினி போட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் அந்த நடிகர்கள் இவர்களுக்கு என்ன செய்தார்கள்... இவர்களுக்கு வாரி இறைக்க வேண்டாம், இவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது சக மனிதனாக கண்டிக்கவாது செய்யலாமே, இந்த மக்கள் நலமுடன் இருந்தால் தானே நாம் வயிறு பிழைக்க முடியும் என்ற சுயநலம் கூடவா இல்லாமல் போயிற்று?

சமீபத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பார்த்தேன். "தலைவா கட்டளையிடுங்கள் காத்திருக்கிறோம்" என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அது. அப்போதும், இப்போதும் நினைக்கிறேன் மாணவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இனத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த தலைவர் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் இவரது கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கிறார்களே களத்தில் குதித்து இருக்க மாட்டார்களா என்ன? மண்சோறு தின்ற மானங்கெட்ட தமிழன்கள் தெருவில் இறங்கி போராடி இருக்கமாட்டார்களா? தீச்சட்டி ஏந்திய தன்மானமில்லா தமிழன்கள் தொடர் முழக்கம் செய்து இருக்கமாட்டார்களா? எதுவுமே நடக்கவில்லை, சிலம்பரசனுக்கு  இருக்கும் உணர்வு கூடவா? ரஜினிகாந்துக்கு இல்லாமல் போயிற்று? திரைப்படத்தில் நடிப்பதாக நினைத்து அவர் ஒருநாள் வந்திருந்தாள் அவரது ரசிகர்கள் வாழ்நாள் முழுக்க போராடி இருப்பார்களே; ஆதரவாக ஒரே ஒரு பக்க அறிக்கை கொடுக்க கூடவா நேரமில்லாமல் யாருக்கோ சே(வ்)வை  செய்து கொண்டிருந்தார்? தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழர்கள் சாகும் போதுமா ரஜினிகாந்தின் மனிதநேயம் செத்துக்கிடந்தது? அதனால் தான் ரஜினிகாந்தின் மனிதநேயத்தை பார்த்து நான் வியக்கிறேன்... 

ஆனாலும் ரஜினிகாந்த் நிம்மதியாக வாழ்கிறார், வாழ்வார் மானங்கெட்ட அன்புள்ள ரஜினிகாந்தின்  ரசிகர்கள் இருக்கும் வரை...
ரஜினிகாந்த் ஆவலுடன் எதிர்பார்க்கும் கோச்ச்சடையான் படம் எப்படி ஓடுகிறது என்பதை பார்க்கத்தான் போகிறேன்...

- அங்கனூர் தமிழன் வேலு    

1 கருத்து:

  1. இனிமேல் எவனாவது அவன் படத்துக்கு பாலபிசேகம் பண்ணுனீங்க பார்த்த இடத்திலேயே செருப்பால அடிப்பேன் !
    தான் ஒரு மிக கேவலமான, சுயநலமிக்க மனித ஜென் மம் என்பதனை இந்த கன்னட இனவெறியன் ரஜினி தொடர்ந்து நிரூபித்து வருகின்றான்.

    ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இரத்த வெள்ளத்தில் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கும் வேளையில் வராத கவலை, தமிழ் பெண்களை சிங்கள இனவெறி நாய்களினால் சீரழித்து அதை படம் எடுத்து மகிழ்ந்த போது அந்த பெண்கள் மீது வராத கவலை, பாலச்சந்திரன் படுகொலையின் போது அந்த பாலகன் மீது வராத கவலை, தன்னை வாழவைத்த தமிழகத் தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப் படும் போது அந்த மீனவர்கள் மீது வராத கவலை, இப்போது சஞ்சய் தத் என்ற ஒரு நடிகன் குண்டு வெடிப்பு குற்றசாட்டுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்ட போது மட்டும் இந்த கோமாளிக்கு வந்து இருக்கின்றது.

    சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த இவனை, இன்று supper star எனும் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது இவன் பிறந்த கன்னட இனமோ அல்லது, இப்போது இவன் பாசம் காட்டும் ஹிந்தியோ அல்ல. முழுக்க முழுக்க தமிழகமும் தமிழ் இனமுமே இந்த வளர்ச்சிக் கும் புகழுக்கும் காரணம்.

    அதை எல்லாம் மறந்து, தன்னை வளர்த்த தமிழகமும் தமிழ் இனமும் இன்று இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றி எந்த எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்து விட்டு இப்பொழுது யாரோ ஒருவருக்காக ஊளை இடுகின்றான்.

    இந்த போராட்டத்தை ஆதரித்து குறைந்த பட்சம் ஒரு அறிக்கை ஒன்று வெளி இட்டால் என்ன குறைந்து விடும். உன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்டு இன்று உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் தமிழ் இனத்துக்காக இதை செய்வதன் மூலம் இந்த ரஜினிக்கு அப்படி என்ன நஷ்டம் வந்து விடும். இவன் எல்லாம் ஒரு மனிதனா. ஒரு காலத்தில் இந்த இனவெறியனுக்கு நானும் இரசிக னாக இருந்தேன் என்பதை நினைக்கும் போதே அருவ ருப்பாக உள்ளது.!!

    உனக்கெல்லாம் வெட்கம் மானம் கிடையாதா? எப்படி
    உன்னால எல்லாம் மக்கள் முன்னாடி வர முடியுது ?எல்லா தமிழர்களுக்கும் நீ ஒரு அவமானம். தமிழின துரோகி, ஈனப்பிறவி.......

    S.Tulasidass
    Malaysia

    பதிலளிநீக்கு