புதன், 30 ஜனவரி, 2013

"விஸ்வரூப" புயலில் சிதைக்கப்படும் தலித் - முஸ்லிம் ஒற்றுமை !




                   
                            "ஒரு சினிமா" "எத்தனை எத்தனை அரசியல்" என்று சொல்லும் அளவுக்கு தமிழகம் இன்று ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹோட்டல், டீக்கடை, பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் என்று எங்கு பாரினும் வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறுகின்றன; விஸ்வரூப படத்திற்கு தடை விதித்தது சரி என்று ஒரு தரப்பும், இது கருத்துரிமையை பறிக்கும் அப்பட்டமான சட்டமீறல் என்று மறுதரப்பும் சூடான விவாதங்கள். இவற்றை எல்லாம் பார்த்தால் சினிமா ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது; இதை விட வெட்ககேடு உண்டா என்று புலம்பலுக்கு உள்ளாகி இருக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களாக இணையங்களுக்கு வருவதை தவிர்த்து வந்தேன்; அப்படியே வந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வந்த வேகத்திலே திரும்பிவிடுவேன். விஸ்வரூபம், விஸ்வரூபம் என்று ஒரே கூச்சல். அப்படி என்ன இந்த செய்தி முக்கியத்துவம் பெற்று விட்டது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று இந்த திரைப்படத்தை பயன்படுத்தி இந்துத்துவம் தன் கோரமுகத்தை வெளிப்படுத்தி விடலாம் என்று பலான பலான கனவுகளை கண்டுகொண்டு இருப்பதை அறிய முடிகிறது. இதற்க்கு முழுப் பொறுப்பும்  தமிழக அரசும், மங்கையர்களின் மறைவானப் பகுதிகளுக்கு வண்ணம் தீட்டி காசுப் பார்க்கும் ஊடகங்களுமே.

தினசரி செய்தி தாள்கள், தொலைகாட்சி செய்திகள், வாரப்பத்திரிக்கைகள் என அத்துனைப் பொறுக்கிகளும் ஒன்று கூடிவிட்டார்கள். தருமபுரி சாதிக்கலவரத்திற்கு கவலைப்படாத ஊடகப் பொறுக்கிகள், கமலஹாசனுக்கு கவலைப்படுகிறார்கள். திண்ணியம் கொடுமைக்கு கவர் ஸ்டோரி போடாத பணப் பேய்கள் இன்று திரைப்படத்திற்கு கவர் ஸ்டோரி எழுதுகிறார்கள். தருமபுரியிலே 300 குடிசைகளுக்கு தீ வைத்த கொடுமை நிகழ்ந்த போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கவலைப்படாத கவர்மெண்ட் இந்த திரைப்படம் வெளிவந்தால் கெட்டுவிடும் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது. தருமபுரி சாதிக்கலவரத்திற்க்குப் பின்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு? அப்போது கெட்டுவிடாத சட்ட ஒழுங்கு இந்த படத்தால் கெட்டுவிடும் என்று முந்திக்கொண்டு தடை விதிக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? எலி என்னடா அம்மணமா ஓடுதே நு பார்த்தா உள்ளே இவ்வளவு வக்கிர எண்ணங்களும், அரசியல் லாபங்களும் இருக்கின்றன. 

எப்படியோ இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. விஸ்வரூப திரைப்படத்தில் இசுலாமியர்களை இழிவுபடுத்துவதாக காட்சி இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் அவர்களின் நோக்கம் தலித் -  முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பது ஒன்றே. கடந்த 24 ஆம் தேதி அன்று தோழர் வே. மதிமாறன் அவர்கள் இணையத்தில்  விஸ்வரூபம் திரைப்படம் குறித்து "இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஊடகங்கள் காட்டி, இந்துக்கள் மத்தியில் அவர்களை பற்றி வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விஸ்வரூபத்திற்கு ஆதராவகவும் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றுகிற… பிரச்சினையாக திசை திருப்பப்படுகிறது.பெங்களுரில் இந்தப் படத்தை இந்து அமைப்புகள் ஆதரித்து இருக்கிறார்கள். சன் டி.வி. செய்தியாளருக்கு பின்‘ பாரத் மாதாக்கி ஜே.. ’ என்று முழக்கமிடுகிறார்கள். இந்தப் பிரச்சின வேறு வடிவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அது மிக அபாயகரமானதாக அறிகுறியாக தெரிகிறது" என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் எனக்குப் புரியாததால் விட்டு விட்டேன். ஆனால் இன்று நடிகர் கமல்ஹாசனின் பேச்சு உறுதி செய்துள்ளது. இன்று விஸ்வரூபம் திரைப்படத்தைப் பற்றி பேசுவோர் அத்துனைப் பெரும் கமலின் மீது பரிதாபப்படுவதை தவிர்க்க முடியவில்லை; ஏனெனில் 100 கோடி முதலீடு செய்துள்ளாராம்; இந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றால் அவரது சொத்துக்கள் ஏலத்துக்கு சென்றுவிடுமாம். முதலீடு செய்தவருக்கு அதைப் பற்றிய கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமலஹாசன் பேசும் போது "எனக்கு மதசார்ப்பற்ற ஒரு இடம் வேண்டும். அது தமிழகமாக இல்லாமல் போய்விட்டால், மதசார்ப்பற்ற மாநிலம் இந்தியாவில் உள்ளதா என்று தேடி குடியமர்வேன். இருந்ததெல்லாம் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்னும் பொழுது, குடியமர நான் உகந்ததாக கருதும் மாநிலத்தில் தங்கலாம் என்று இருக்கிறேன். காஷ்மீர் முதல் கேரளம் வரை ஒதுக்கி வைத்திருக்கிறேன் நீங்கள் பார்ப்பீர்கள். எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், மதசார்ப்பற்ற ஒரு நாடு தேடி போவேன்." என்று ரெடி, ஸ்டார்ட், ஆக்சன் சொல்லாமலே நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் "எனக்கு மதம் கிடையாது. மனிதம் தான் என்பது உங்களுக்கு பலருக்கு தெரியும்." என்று எல்லோரின் அனுதாபத்தை பெற்றுவிட்டார். இதற்கெனவே காத்திருந்தது போல கூத்தாடிகள் எல்லோரும் ரஜினிகாந்த், அர்ஜுன், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா,  அரவிந்தசாமி, சிம்பு, நடிகை ராதிகா, சினேகா உட்பட தமிழகத்தை விட்டு போகாதீர்கள் என்று கிளீசரீன் போடாமேலே கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த கூத்தாடிகளில் எவனாவது எம்மக்கள் கொத்துக் கொத்தாக செத்தப் போது கண்ணீர் வடித்தானா? அதோடு மட்டுமில்லாமல் சிவகாசியில் ஏற்ப்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அண்டை மாநிலத்து நடிகர் மம்மூட்டி 35 லட்சம் மதிப்பில் மருத்துவ உதவி செய்தார். ஆனால் எம்மக்களின் ரத்தத்தை உறிஞ்சிப் பிழைக்கும் இந்த கூட்டம் எவனாவது / எவளாவது ஒரு துரும்பை கிள்ளிப் போட்டார்களா? அது மட்டும் இல்லாமல் மதுரை கமல் நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில் "தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்." என்று வெட்கமே இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இதை விட வெட்க கேடு வேண்டுமா?

உண்மையில் கமலஹாசன் மதசார்பற்ற மனிதர் தான் என்பது உண்மையானால் The innasense of Muslim என்ற அமெரிக்கத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு வந்த போதே அவர் சுதாரித்து இருக்கவேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி இருக்கவேண்டும். ஆனால் அதில் இருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இங்கே தான் காவி பயங்கரவாதிகள் விழித்துக் கொண்டனர். இசுலாமியர்களின் உணர்ச்சியை கண்டு வியந்த அவர்கள் அதோடு வியூகமும் வகுக்கத் தொடங்கினார்கள். அதற்க்கு விஸ்வரூபம் மூலமாக மடை திறந்து விட்டிருக்கிறார் கமலஹாசன். ஏன் காவி பயங்கரவாதிகள் இதை பயன்படுத்தவேண்டும் என்ற கேள்வி எழலாம். சமீப காலமாக தலித்களும், இசுலாமியர்களும் ஓரணியில் நிற்கிறார்கள். அதற்க்கு சான்றாக தருமபுரி சாதிக் கலவரத்திற்கு தலித் அமைப்புகளுக்கு முன்னாள் முதன்முதலில் களம் இறங்கியவர்கள் இசுலாமிய அமைப்புகள். SDBI நேரடியாக கள ஆய்வு செய்து அரசுக்கு தம் கண்டத்தையும், பரிந்துரைகளையும் செய்தது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தலித்களையும்  - இசுலாமியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கட்டினார். அதற்க்கு ஓரளவு நல்லப் பயனும் கிட்டியது. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்ட காவி பயங்கரவாதிகள் தலித்துகளையும், இசுலாமியர்களையும் ஓரணியில் திரள விடக்கூடாது என்று முடிவெடுத்து விட்டனர். அதனால் இந்து முன்னணியினரும்,  வன்னியர் சங்க தலைவர் ராமதாசும், திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

தமிழக அரசு இதை எப்படி பார்க்கிறது என்றால் மத்திய அரசின் தணிக்கை துறையை குற்றம் கூறி அதில் லஞ்சம் பரிமாறப் பட்டதாக கூறி காங்கிரசுக்கு எதிரான தமிழ்தேசியவாதிகளின் ஓட்டுக்களையும், இசுலாமியகளுக்கு ஆதரவாக செயல்படும் பேரில் இசுலாமியர்களின் வாக்குகளையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாங்கி விடலாம் என்று கணக்கிடுகிறது. அதோடு தம் மீது கோபத்தில் உள்ள மக்களின் அபிமானத்தைப் பெறவும் இதை பகடைக் காயாக பயன்படுத்துகிறது. ப. சிதம்பரத்தின் புத்தக விழாவில் கமல் கலைஞர் அவர்களோடு கலந்து கொண்டதற்கும் பழி வாங்குகிறார். இதற்கு முன் கலைஞரை பாராட்டிய காரத்தினால் ரஜினியை பழிவாங்கிய அரசு இப்போது கமலையும் பழிவாங்குகிறார்.

எது எப்படியோ இன்று ஒட்டுமொத்த இசுலாமியர்களையும், மனிதாபிமானமற்றவர்கள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என்று சித்தரித்து, விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே இழிவுபடுத்திவிட்டது தமிழக அரசு. எந்த திரைப்படம் வந்தால் இசுலாமியர்களுக்கு இழிவு என்று கருதினோமோ அதை திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே செய்துவிட்டனர். இசுலாமியர்களின் உணர்வுகளை மூலதனமாக்கி இசுலாமியர்களுக்கு எதிராகவே பிரச்சாரம் நடக்கிறது. இதற்க்கு சூத்திரதாரி கமலா? இல்லை அவர் பகடைக் காயக்கப் பட்டாரா? என்பது அவரவர் மனசாட்சிக்கே விளங்கும். எது எப்படியோ இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. அவ்வளவு தான் சொல்ல முடியும்...

- அங்கனூர் தமிழன் வேலு        

2 கருத்துகள்:

  1. வன்னியருக்கு எதிராக செயல்பட்டதால் குடிசை எரிந்தது இனிமேலாவது காதல் கத்தரிகாய் என்று அலையாமல் இருப்பீர்கள் என்றால் திருந்துவது போல் தெரியவில்லையே ?

    பதிலளிநீக்கு
  2. திருந்த வேண்டியது நாங்களா? நீங்களா? தோழர் கொஞ்சம் மல்லாந்து படுத்து சிந்தியுங்கள்...

    பதிலளிநீக்கு