செவ்வாய், 8 ஜனவரி, 2013

திருமாவுக்கு ஓட்டு வாங்கும் அரசியல் தெரியவில்லை !

தமிழன் வேலு  : திருமாவளவனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பத்திரிக்கை கடைக்காரரின் பதில் : 50 ஆண்டுகளாக பத்திரிக்கை கடை நடத்துகிறேன்; அந்த வகையில் பல்வேறு அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அவர்களைப் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். நேற்றைக்கு கட்சி ஆரம்பித்தவன் எல்லாம் தன்னை மிகப்பெரிய தலைவன் என்றும், என் பின்னால் பல கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று நாக்கூசாமல் பொய் சொல்லும் இந்த அரசியல் களத்தில், இன்னமும் என்னை ஒரு கட்சியின் தலைவனாக அரசியல்வாதிகளே  கூட ஏற்றுக் கொள்ளவில்லையே, என்று மனம் திறந்து கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது; மேலும் என்னிடம் பத்திரிக்கை வாங்கும் பலரிடம்  அரசியல் குறித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது,  திருமா அரசியலில் முதிர்ச்சியை, பக்குவத்தை வெளிக்காட்டுவதாக நான்கு, ஐந்து பேர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்; திருமா நினைத்து இருந்தால் தருமபுரி கலவரத்தை வைத்து அரசியல் செய்திருக்கலாம்; ஆனால் அவர் செய்யவில்லை, ராமதாஸ் பேசிவரும் பேச்சுக்கு திருமாவும் பதிலுக்குப் பதில் சவடால் விட்டு இருந்தால் நிச்சயம் பல கலவரங்கள் நிகழ்ந்து இருக்கும்; ராமதாஸ், திருமாவை ரவுடி என்று சொன்னப் பிறகும், நான் இன்னமும் சமூக நல்லிணக்கத்திற்கு அவரோடு கைகோர்க்க தயார் என்று சொல்லும் பக்குவம் அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய சிறந்த பண்பு. ஆனால் ஒன்று, திருமா நல்ல பேச்சாளர், நல்ல சிந்தனையாளர், இயல்பிலே போராடும் குணம் படைத்தவர்; ஓட்டு வாங்கும் அரசியல் மட்டும் அவருக்கு தெரியவில்லை...

(வழக்கமாக பத்திரிக்கை வாங்கும் கடைகாரரிடம் நேற்று இரவு பேசியதில் இருந்து.... நான் எந்த கட்சி என்று அவருக்கு தெரியாது )

தொண்டர்களுக்கு தலைவர்கள் சேர்க்கும் பெருமை இதுவல்லவா.... பெருமை கொள்கிறேன் !          

2 கருத்துகள்:

  1. திருமா என்ன பெரிய இவனா அவன் பேசி கலவரம் வந்தா சாகப்போறது நீங்க தானடா

    பதிலளிநீக்கு
  2. கலவரம் வரவேண்டும் என்ற நோக்கோடு யார் பேசிவருகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.... உங்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்..!

    பதிலளிநீக்கு