புதன், 2 ஜனவரி, 2013

விகடன் இதழுக்கு இதுதான் பெருமையா?


ஆனந்த விகடன் எப்படிப் பட்ட இதழாகவும் இருந்துவிட்டு போகட்டும்; அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை ! அதே மாதிரி நயன்தாரா தம் தனிப்பட்ட வாழ்வில் எப்படிப்பட்டவராகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; அதைப்பற்றியும்  நமக்கு கவலை இல்லை ! ஆனந்த விகடன் இதழுக்கு நடிகர்களை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம், அதேவேளையில் நடிகர் ஆர்யாவும், அவரின் தம்பி சத்யாவும் அந்தப் பேட்டியில் நிறைய பேசி இருக்கிறார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு நயன்தாரா யாருக்கு? என்று தலைப்பிட்டு, அதோடு மட்டுமில்லாமல் அதையே அட்டைப்படமாக வெளியிட்டு இருப்பதில் உள்நோக்கம் இருக்கவே செய்கிறது என்பது தெளிவாகிறது; இதைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்று ஆனந்த விகடன் நினைக்கிறதா? இல்லை இதைத்தான் தமிழர்களுக்கு சொல்லவேண்டும் ஆனந்த விகடன் விரும்புகிறதா? இதழின் உள்ளே அவர்கள் எவ்வளவுதான் சமூக முன்னேற்றம் பற்றி பேசியிருந்தாலும் வளர் இளம் பருவத்தில் படிப்பதே மனதில் ஆழமாக பதியும் என்பதைப் போலஅட்டைப்படத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் இந்த இதழ் முக்கியமாக கருதுகிறது போலும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 75 ஆண்டுகாலம் தமிழின் நம்பர் 1 வார இதழ் என்றும், தமிழர்களின் நாடித்துடிப்பு என்றும் பெருமை பேசும் ஆனந்த விகடன் இதழுக்கு இதுதான் பெருமையா என்பதை ஆனந்த விகடனே  விளக்கட்டும். அதோடு மட்டுமில்லாமல் அரைகுறை ஆடைதான் வன்புணர்ச்சிக் குற்றங்களுக்கு காரணம் என்று பெரும்பாலானவர்கள் பேசிவரும் நிலையில், இதுபோன்ற மலிவான விளம்பரங்கள் ஏன் பெண்களை மோகப்பொருளாக எண்ணத் தூண்டாது! என்பதே என் கேள்வி !

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக