திங்கள், 7 ஜனவரி, 2013

ஆதிக்கவாதிகளால் எரிவது போதாதா?



தமிழ் நதி : நன்றி என்னை உங்கள் நன்பனாக ஏற்றுக் கொண்டதற்கு. தலித்துக்கள் என்பதை எரித்து விடுங்கள். தமிழ்ச்சிறுத்தையாக முழக்கமிடுங்கள்!

பதில் : ஏற்கனவே இங்கே ஆதிக்கவாதிகளால் எரிவது போதாதா? நானும் எரிக்கவேண்டுமா? நாட்டில் எத்தனைப் பிரச்சனை இருந்தாலும் எனக்கு முதல்ப் பிரச்சனை சாதி; கடைசி மனிதர்களின் கண்ணீரைக் கூட ஓட்டாக மாற்றத்துடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் நானும் தமிழ், தமிழ் என்று கூப்பாடுப் போட  எனக்கு உடன்பாடில்லை; தலித் விடுதலையே தமிழ்தேசிய விடுதலை( http://thamizhanvelu.blogspot.in/2012/07/blog-post_4258.html ) என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் ; அதுதான் உண்மையும் கூட தலித் விடுதலையின் மூலமே சாதியை ஒழிக்க முடியும்; சாதி ஒழிப்பின் மூலமே தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப முடியும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக