புதன், 3 அக்டோபர், 2012

எத்தனை இரவுகள் விழித்திருந்திருப்பாய்?

எம்மை எல்லாம் 
மனிதராய் தலைநிமிர
செய்த மகத்தான தலைவரே! 

எத்தனை இரவுகள்
விழித்திருந்திருப்பாய்?  
விழிக்காமல் விழுந்துக்
கிடக்கும் எம்மக்களை எழுப்ப !

எத்தனை இழிவுகளை 
சுமந்திருப்பாய்?
இழிநிலையே கதி என்று 
கிடந்த எம்மக்களின் 
இழிவுகளைத்  துடைக்க!!

எத்தனை நாட்கள் 
பட்டினி கிடந்திருப்பாய்?
பசியிலே செத்து மடிந்த 
எம்மக்களின் பசியைப் போக்க !!!

எத்தனை புத்தகங்களை 
வாசித்து இருப்பாய்?
எந்த பக்கத்திலாவது
எம்மக்களுக்கு விடிவுப் பிறக்க 
வழி இருக்காதா என்ற ஏக்கப் 
பெருமூச்சுடன்!!! 

கோமான்கள் எல்லாம் கோவணம்
கட்டி கும்மியடித்தப் போது நீ மட்டும்  
கோட்டு சூட்டில் வந்து அதிகார 
வர்க்கத்தின் ஆணவத்தை கிழித்தாய்!!!

வரலாற்றில் கருப்பு பக்கங்களை 
மறைத்தார்கள் - அந்த கயமத்தனத்தை
சுட்டிக்காட்ட எம்மக்களிடம் 
புத்தகங்களை கொடுத்தாய்!!!

வரலாற்றுக் கறுப்புப் பங்கங்களை 
வழிநெடுக நீ சுட்டிக் காட்டிக் கொண்டே 
வந்தாய், ஏனோ எம் முன்னோர்கள் 
அதை வழிமொழிய மறந்தார்கள்; 
நீ கொடுத்தப் புத்தகம் எம் கரங்களை 
வந்து சேர்ந்தது; நாங்கள் விழித்துக் 
கொண்டோம் இனி காவிப் புதல்வர்களின் 
கோரமுகம் கிழிந்து நாறு நாராய் 
தொங்கும் !!! 

நீ இழுத்து வந்த தேருக்கு  
இனி ஊர்த்தெருவில் 
இருந்து வடம் பிடிப்போம் !! 
வரலாற்றில் இடம் பிடிப்போம்!! 
---------------------------------------------
அன்புடன் 
அங்கனூர் தமிழன்வேலு

1 கருத்து:

  1. திசம்பர் 6 எம்மை எல்லாம் மனிதராய்
    தலைநிமிர செய்த மகத்தான தலைவர்
    புரட்சியாளரின் நினைவுதினம்....
    வீரவணக்கத்துடன் ஆதிக்க திமிரை
    அறுத்தெறிய சபதம் ஏற்போம்...

    பதிலளிநீக்கு