திங்கள், 31 டிசம்பர், 2012

பதிலுக்குப் பதில் !



Vaniyambadi Sdpi : இறைதூதரின் மீது உள்ள பற்று, இறப்பின் விளிம்பில் நின்று தவிக்கும் நம் சக தோழன் மீது இல்லையா? தம்பி வேலு அவர்களே, நபிகள் நாயகம் ஒரு நபி ஆவார் , அவருக்கும் அபு தாகிர் க்கும் நீங்கள் ஒரே மதிரியான போராட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லும் அந்த வாசகமே சரி இல்லை, என்பதை தெரிவித்து கொள்கின்றேன்

என் பதில் : தோழரே.. நீங்கள் என்றைக்காவது நபிகளை பார்த்தது உண்டா? அவர் கருப்பா? சிவப்பா ? உயரமா? குள்ளமா? என்று தெரியுமா? ஏன் அவருக்கு சிலைகளோ, உருவப்படங்களோ இல்லை என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்; இசுலாம் மார்க்கப்படி கடவுள் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரையும் (நபிகள் நாயகம் உட்பட) யாரும் வணங்குதல் கூடாது என்பதை உணர்த்தவே அவருடைய புகைப்படங்களும், அவருக்கு சிலைகளும் தவிர்க்கப்பட்டன; காலப்போக்கில் இயேசுவைப் போல நபிகள் நாயகம் அவர்களையும் கடவுள் என்ற தவறான வாதம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது புகைப்படமும், அவருக்கு சிலைகளும் தடை செய்யப்பட்டது; அதை செய்தவரும் நபிகள் நாயகம் அவர்களே. தனிமனித வழிபாட்டை தம் வாழ்நாளிலும், அதற்குப் பின்னரும்  கடுமையாக எதிர்த்தவர் நபிகள் நாயகம் அவர்கள்.  ஒருமுறை நபிகள் அவர்கள் தம் தோழர்களுடன் தொழுகைக்கு சென்று இருக்கும் போது,நபிகள் அமர்ந்து தொழுகை செய்தாராம், அவருடைய தோழர்கள் நின்றுகொண்டு தொழுதார்களாம், நபிகள் அவர்கள் உங்களைப் போலவே நானும்; நான் எப்படித் தொழுகிறேனோ அப்படியே நீங்களும் தொழலாம் என்று வலியுறுத்தினார்; (ஆதாரம் : P.J.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மனிதனுக்கேற்ற மார்க்கம்) அதன் படியே இன்றும் வழக்கத்தில் இருக்கிறது; அரபு மன்னனுக்கு சமமாக அரபு நாட்டின் கடைகோடி இசுலாமியனும் ஒரே இடத்தில் தொழுகிறார்கள். அல்லாஹ்வின் பார்வையில் எல்லோரும் சமம்; யாரும் யாருக்கும் உயர்ந்தவர் அல்ல; என்று போதித்த நபிகள் நாயகம் அவர்களின் கொள்கை முழக்கத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு சம்பவம் இசுலாமிய மதத்தை தவிர வேறு எந்த மதத்தில் நடந்திருந்தாலும் நான் இப்படி கேட்டு இருக்க மாட்டேன்; உதாரணமாக இந்து மதத்தில் ராமனுக்கு விழா எடுப்பார்கள்; ராமனை வழிபடும் தொண்டர்களை நசுக்குவார்கள்; ஆகவே அங்கே  சமத்துவமோ, தனி மனித உரிமையோ இல்லை; இசுலாமியத்தில் இருப்பதனால் தான் நான் நபிகளோடு அபுதாஹீரை ஒப்பிட்டேன். இசுலாமிய மார்க்க கொள்கைப்படி கடவுள் (அல்லாஹ்) பார்வையில் நபிகள் நாயகம் அவர்களும், அபூதாஹீரும் இருவேறல்ல; யாரை விடவும் யாரும் உயர்ந்தவர் அல்ல;        யாரை விடவும் யாரும் தாழ்ந்தவர் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். மன்னிக்கவும்... நீங்கள் இசுலாமியராக இருக்கத் தகுதி அற்றவர் என்றே நினைக்கிறேன்....

- அங்கனூர் தமிழன் வேலு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக