வெள்ளி, 14 டிசம்பர், 2012

திருந்தி வாருங்கள் ! திரும்பி வாருங்கள் !


நாற்ப்பத்தெட்டு சாதியினர் 
மருத்துவர் அய்யா 
தலைமையேற்று ஓரணியில்!

அய்யா ...நாற்ப்பதொன்பதாய்
நாங்களும் வருகிறோம் !

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்
மீனவனின் உயிருக்கு உத்திரவாதம்
இல்லையாம்; பாதுகாக்க வேண்டிய
இந்திய அரசுக்கு, அவர்கள் மீது
அக்கறை இல்லை; பாதுகாப்புக்கு
செல்வோம் வருவீர்களா?

காந்தல் மலராய் கருகிப்
போன நம் ஈழ சொந்தங்களின்
கண்ணீரைத் துடைக்க, ஐ.நா.
வின் மௌன கதவை தட்ட
மத்திய அரசுக்கு நெருக்குதல்
கொடுப்போம் வருவீர்களா?

முல்லைப் பெரியாரை
உடைக்கப் போகிறார்களாம்;
பாதுகாக்க வேண்டிய மத்திய
அரசோ, ராணுவப்
பாதுகாப்பு தாராதாம்;
வாருங்கள் பாதுகாக்க
படை எடுப்போம் வருவீர்களா?

பாலாற்றின் குறுக்கே அணை
கட்டப் போகிறார்களாம்;
அணை கட்டிவிட்டால் அழிவு
நமக்குத்தானே ! வாருங்கள்
அணை கட்ட கூடாது என்று
ஒன்றிணைவோம் வருவீர்களா?

காவிரியை எதிர்பார்த்து
கண்ணீர் மட்டுமே மிச்சமாய்
இருக்கும் நம் விவசாயிகளின்
கண்ணீரைத் துடைக்க,
காவிரியில் இருந்து நீர் எடுக்க
நடைபயணம் செல்வோம்
வருவீர்களா?

இப்படி ஒவ்வோர் நாளும்
உத்திரவாதமற்ற வாழ்வை
தமிழர்கள் வாழும் வேளையில்
எங்களுக்கு எதிராய் முண்டாசு
கட்டுகிறீரே நியாயமா?

எங்களை தனிமைப் படுத்துவது
உங்களைத் தனிமைப்படுத்துவதற்கு
சமமய்யா ! திருந்தி வாருங்கள் !
திரும்பி வாருங்கள் !
நாம் காண வேண்டிய களம்
நூறாயிரம் !

- அங்கனூர் தமிழன்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக