புதன், 19 டிசம்பர், 2012

நடிகை குஷ்புக்கு எதிரான போராட்டம் ! இந்துக்கடவுள்கள் மீதான பக்தியா? ஆணாதிக்க திமிரா?


ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து கொண்டு நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவரது சேலையில் ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் உருவம் பொரித்து இருந்துள்ளது; ஆகவே நடிகை குஷ்பு இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டார் என்று இந்து மக்கள் கட்சியினர்குஷ்பு வீட்டை முற்றுகை இட்டுள்ளனர். இது உண்மையிலே  எந்த விதத்தில் நடந்தது என்பது தான் தற்போதைய கேள்வி; இந்துக் கடவுள்களின் மீதான பக்தியா? இல்லை ஆணாதிக்க திமிரா? 

அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறேன்;-

1. ராமர் ஏகபத்தினி விரதன்; அவர் சீதையை தவிர வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட நினைக்கமாட்டார்; வேறு எந்த பெண்ணும் அவரை நினைக்கக் கூடாது என்றால் ராமர் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்கிறீர்கள்? அனுமன் பிரமச்சாரி என்றால், அனுமன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் தட்சணையாக உண்டியலில் போடுவதை ஏன் எடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்?

2. இந்துக் கடவுள்கள் படம் பொரித்து சேலை தயாரித்து அது சந்தைக்கு வந்தப் பிறகே நடிகை குஷ்பூ பயன்படுத்தி உள்ளார்; அப்படியானால் அந்த சேலையை தயாரித்த கம்பெனிக்கு எதிராகத் தானே போராட வேண்டும்? ஏன் ஒருப் பெண்ணிற்கு எதிராக போராடுகிறீர்கள்? 

3. இந்துக் கடவுள்களின் அவமதிப்புக்குவதால் தான் போராட்டம் செய்தோம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால் தினமும் பத்திரிக்கைகளில் வெளியாகும் கடவுள்களின் படங்கள் பயன்பாட்டிற்குப் பிறகு எங்கே செல்கிறது தெரியுமா? சாக்கடை, குப்பைத் தொட்டி, ரோட்டோரம் என்று காலில் மிதிபட்டு அவமதிப்பது உங்களுக்கு தெரியாதா? இன்னும் சொல்வோமானால் நீர் கிடைக்காதப் பட்சத்தில் மலம் துடைக்கவும் அது பயன்படத்தானே செய்கிறது? பத்திரிக்கைகளில் கடவுள்களின் படங்களை போடவேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே?

4. ஒரு குடிகாரன், விலை மாதுக்கள் வீட்டிற்கு செல்பவன் ராமர் படமோ, அனுமன் படமோ பொரித்த சட்டையை போடும்போது மட்டும் அந்தக் கடவுள்களுக்கு அவமதிப்பு இல்லையா?

5. ஆண்கள் லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற பெண் கடவுள்களின் படங்கள் கொண்ட உடையை பயன்படுத்தினால் அது பக்தி; அதுவே ஒருப் பெண் ராமர், கிருஷ்ணர், அனுமன் போன்றோர் படங்கள் பொறித்த உடையை பயன்படுத்தினால் அது அவமதிப்பா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் போராட்டம் செய்தவர்கள் உளசுதியோடு பதில் சொல்வார்களா?

- அங்கனூர் தமிழன் வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக