ஆண் - பெண்
உயிரிலும், உணர்விலும்
வேறுபாடில்லை; உடல்மொழி
வேறுபாடுண்டு !
உடல்மொழி வேறுபாடு - அதனால்
உரிமையிலும், நீதியிலும்
வேறுபாடு !
ஆண்களைப் போல்
பெண்களுக்கும் சத்தமாக பேச
உரிமையுண்டு !
ஆண் பேசினால்
அது வீரம் - அதுவே
பெண் பேசினால்
அது அகம்பாவம் (?)
ஆண்களைப் போல்
பெண்களுக்கும் ஆடையில்
உரிமையுண்டு
ஆண் மேலாடையை துறந்தால்
அது ஆண்மை - அதுவே
பெண் மேலாடை விலகினாலும்
அது ஆபாசம் (?)
ஆண்களைப் போல்
பெண்களுக்கும் காதல் உண்டு !
ஆண், காதலை வலிய சொன்னால்
அது அன்புமிகுதி - அதுவே
பெண், காதலை வலிய சொன்னால்
அது அறுவறுப்பு
ஆண்களைப் போல
பெண்களுக்கும் சபலம் உண்டு !
ஆண் சபலப்பட்டால் அது
பெண்ணின் உடையின் தவறு
அதுவே
பெண் சபலப்பட்டால் அது
பெண்ணின் மனதின் தவறு (?)
ஆண்களைப் போல
பெண்களுக்கும் காமம் உண்டு !
காமம் ஆணுக்கு வந்தால்
அது மரபியல் கோளாறு
அதுவே
பெண்ணுக்கு வந்தால் அவள்
பரம்பரையே கோளாறு (?)
ஆண்களைப் போல
பெண்களுக்கும் உடல்தேவை
உண்டு !
உடல்தேவைக்கு ...
பெண்ணை ஆண் நாடினால் அது
அவன் தெரியாமல் செய்த தவறு
அதுவே
ஆணை பெண் நாடினால் அது
அவள் செய்யும் தேவிடியாள் தனம் (?)
உயிரிலும், உணர்விலும்
வேறுபாடில்லை; உடல்மொழி
வேறுபாடுண்டு !
உடல்மொழி வேறுபாடு - அதனால்
உரிமையிலும், நீதியிலும்
வேறுபாடு !
ஆண்களைப் போல்
பெண்களுக்கும் சத்தமாக பேச
உரிமையுண்டு !
ஆண் பேசினால்
அது வீரம் - அதுவே
பெண் பேசினால்
அது அகம்பாவம் (?)
ஆண்களைப் போல்
பெண்களுக்கும் ஆடையில்
உரிமையுண்டு
ஆண் மேலாடையை துறந்தால்
அது ஆண்மை - அதுவே
பெண் மேலாடை விலகினாலும்
அது ஆபாசம் (?)
ஆண்களைப் போல்
பெண்களுக்கும் காதல் உண்டு !
ஆண், காதலை வலிய சொன்னால்
அது அன்புமிகுதி - அதுவே
பெண், காதலை வலிய சொன்னால்
அது அறுவறுப்பு
ஆண்களைப் போல
பெண்களுக்கும் சபலம் உண்டு !
ஆண் சபலப்பட்டால் அது
பெண்ணின் உடையின் தவறு
அதுவே
பெண் சபலப்பட்டால் அது
பெண்ணின் மனதின் தவறு (?)
ஆண்களைப் போல
பெண்களுக்கும் காமம் உண்டு !
காமம் ஆணுக்கு வந்தால்
அது மரபியல் கோளாறு
அதுவே
பெண்ணுக்கு வந்தால் அவள்
பரம்பரையே கோளாறு (?)
ஆண்களைப் போல
பெண்களுக்கும் உடல்தேவை
உண்டு !
உடல்தேவைக்கு ...
பெண்ணை ஆண் நாடினால் அது
அவன் தெரியாமல் செய்த தவறு
அதுவே
ஆணை பெண் நாடினால் அது
அவள் செய்யும் தேவிடியாள் தனம் (?)